Tuesday, November 4, 2014

என் அப்பா!!!



என் அப்பா
நான் தூங்க தொட்டிலை அசைத்தது யாரோ
நாளும் என்னை வளர்த்திட உழைத்தது யாரோ
நடை பழக்கிட என்னோடு நடந்தது யாரோ
நாளடைவில் பள்ளிக்கு செல்ல பாதயை காட்டியது யாரோ
நல்ல பழக்கங்களை நலமுடன் பழக்கியது யாரோ
நல்லோரை மதித்திட நாளும் நல்கியது யாரோ
நாளும் நான் உயர்ந்திட ஏணியாய் நின்றவர் யாரோ
நான் தொய்யும் போது தோள்களை தட்டியவர் யாரோ
நாட்டில் நான் செல்லும் பாதைக்கு வழிக்காட்டியவர் யாரோ
நான் இவ்வுலகிற்கு வர வழிசெய்தவர் எவரோ அவரே என் அப்பா!!!
                                             தங்க பிரனேஷ்.இரா